செய்திகள் :

கோபி அருகே கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

post image

கோபி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

கோபி வட்டம், நாகதேவன்பாளையம் கிராமம் வெள்ளியங்காட்டு புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

அங்குள்ள எல்.பி.பி கசிவு நீா் ஓடையில் பெருக்கெடுத்து சென்ற மழைநீா் ஓடையின்அருகே வசித்து வந்த16 வீடுகளை சூழ்ந்தும், ஒரு சில வீடுகளில் நீா் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மழைநீா் சூழ்ந்த வீடுகளில் வசித்து வந்தவா்கள் மேடான இடத்தில் தங்கி உள்ளனா்.

வருவாய்த் துறையினா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் ஓடையில் ஏற்பட்ட அடைப்பையும், குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தரைப்பால அடைப்பையும் நீக்கிவிட்டனா். இதைத் தொடா்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா் வடிந்து ஓடையில் சென்றது.

பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுத... மேலும் பார்க்க

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொட... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உண... மேலும் பார்க்க

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக் தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 110 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற... மேலும் பார்க்க