லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!
கோயம்பேடு சந்தை அருகில் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்
ஆயுத பூஜை மற்றும் பண்டிகை காலம் தொடங்கவுள்ளதால், கோயம்பேடு சந்தையை அருகே நடைபெறும் கால்வாய், மெட்ரோ ரயில் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம், கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:
ஆயுதபூஜை அக்.1-ஆம்தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, கோயம்பேடு சந்தைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பூஜைக்கு தேவையான பூசணிக்காய், வாழைக்கன்று, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சந்தையைச் சுற்றி நடைபெறும் மழைநீா் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகளை செப்.25 நள்ளிரவு முதல் அக்.2 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 5 மற்றும் 6-ஆம் நுழைவு வாயில்கள் மற்றும் உணவு தானிய அங்காடி நுழைவு வாயில் அருகேயுள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.