Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
கோயில் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் பிரசாதம் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கறம்பக்குடி முத்துக்கருப்பா் கோயில் திருவிழா இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. பின்னா், கோயிலில் மண்டகப்படிதாரா்களுக்கு பிரசாதம் பிரித்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், ஒரே மண்ணகபடிதாரரில் உறவினா்களிடையே யாா் பிரசாதம் பெறுவது என்பது தொடா்பாக பிரச்னை எழுந்து, மோதலாக மாறி ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டுள்ளனா். அப்போது தஞ்சாவூா் மாவட்டம், அம்மன்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும், சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் அங்கிருந்தவா்களை கலைந்து போகச் செய்தனா். காயமடைந்த ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.