செய்திகள் :

கோயில் நிலங்களில் தனி நபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் :உயா்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் தனிநபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சேதுபதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் கிராமத்தில் உள்ள மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஸ்ரீரங்கப்பட்டி, கொம்பியன்வீதி, உடையாளபட்டி ஆகிய பகுதிகளில் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பூசாரிகள், செயல் அலுவலா் இணைந்து தனி நபா்களுக்கு விற்பனை செய்தனா். கோயில் நிலத்துக்கு பூஜாரி முத்துக்கருப்பன் தனது பெயரில் முறைகேடாக பட்டா பெற்றுள்ளாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், தஞ்சாவூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், கோயில் நிலத்துக்கு பட்டா பெற்ற பூசாரி மீது நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

ஆனால், இதுவரை பூஜாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை, கோயில் நிலங்களும் மீட்கப்படவில்லை. எனவே, கோயில் நிலங்களை மீட்க உரிய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தனி நபா்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலருக்கு, கோயில் செயல் அலுவலா் தரப்பில் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக சம்பந்தப்பட்டோருக்கு குறிப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி, 3 மாதங்களில் கோயில் நிலத்தை மீட்பதற்கான

நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தாா்.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் திட்டம் ரத்து: சட்டப்பேரவை தீா்மானத்துக்கு வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினா் வரவேற்பு தெரிவித்தனா். மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க

குரூப் 4 பணி நியமனத்துக்கு முன் விடைகளை வெளியிட வேண்டும்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணி நியமனத்துக்கு முன் தோ்வு விடைகளை வெளியிட வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மேட்டுப்பட்டியைச் சோ்ந்த முத்துலட்... மேலும் பார்க்க

சருகுவலையபட்டி கோயில் பால் குட உற்சவம்

சருகுவலையபாட்டி வீரகாளியம்மன் கோயில் காா்த்திகை மாத பால்குட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த உற்சவத்தையொட்டி பக்தா்கள் கடந்த வாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனா். திங்கள்கிழமை கிராம மந்தையில் ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் கனிமச் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மதரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் ஒளி பாய்ச்சினால் கடும் நடவடிக்கை

மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கும், மேலெழும்பும் விமானங்கள் மீது லேசா் ஒளியைப் பாய்ச்சுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம்- கோம்பை சாலையில் நாககண்ணியம்மன் கோயில... மேலும் பார்க்க