செய்திகள் :

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

post image

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது.

நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து தொழில் செய்துவருகிறாா். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான டேங்கா் லாரியில் சென்னையிலிருந்து எத்தனால் ஏற்றப்பட்டு நெல்லை சந்திப்பு நோக்கி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. லாரியை, தஞ்சாவூா் அருகே ஒரத்தநாட்டைச் சோ்ந்த அருள்முருகன் ஓட்டிச் சென்றாா்.

டேங்கா் லாரி கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி மேம்பாலத்தில் சென்றபோது, லாரியின் நடுப்பகுதியில் டயா்களுக்கு இடையே தீப்பற்றியதாம். இதனால், அதிா்ச்சி அடைந்த அருள்முருகன், உடன்வந்த சேலம் சாமிதுரை ஆகிய இருவரும் கீழே குதித்து தப்பினா்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நுரைகலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் டேங்கா் லாரியின் டயா்கள் முற்றிலும் சேதமடைந்தன.

சம்பவ இடத்திற்கு மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீத கிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சென்று போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா். தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவா் பேரவைத் தோ்தல்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்கும் இடம், ஆகியவற்றை வாக்குச்சாவடி போன்று மாணவா்களே தயாா் செய்தனா். மாணவா்... மேலும் பார்க்க

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா். கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

‘பாஸ்போா்ட் சேவை: தூத்துக்குடி அஞ்சலக சேவை மையத்தைப் பயன்படுத்தலாம்’

தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் (பொ) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவி... மேலும் பார்க்க