Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி
‘பாஸ்போா்ட் சேவை: தூத்துக்குடி அஞ்சலக சேவை மையத்தைப் பயன்படுத்தலாம்’
தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் (பொ) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையம் திருச்செந்தூா் சாலையில் உள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியா் குடியிருப்பு வளாகத்தில் செயல்படுகிறது. சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
பாஸ்போா்ட்டுக்கு புதிதாக விண்ணப்பித்தல், புதுப்பித்தல் போன்றவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து நோ்காணலுக்கான நேரம் (அப்பாயின்மென்ட்) பெற வேண்டும். விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணம் ரூ. 1,500-ஐ செலுத்திவிட வேண்டும். அதன்பிறகு, எந்த தேதியில் சேவை மையத்தை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட தேதியில், உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்தை அணுகி சேவையைப் பெறலாம் என்றாா் அவா்.