செய்திகள் :

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல்

post image

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழுமம் அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன் பேரில் நவீன இயந்திரங்களுடன் கூடிய மூலப்பொருள்களை தரம் பிரிக்கும் கூடம், கடலை மிட்டாய் உற்பத்தி, பேக்கேஜிங் கூடம், உணவுப் பொருள்கள் பகுப்பாய்வு கூடம் ஆகியவற்றை அமைக்க, குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ. 7 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்து, அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதன் மொத்த மதிப்பீட்டில் 90 சதவீதம் தமிழக அரசால் வழங்கப்பட்டு மீதமுள்ள 10 சதவீதம் கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத்தால் முதலீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூப்பன்பட்டி ஊராட்சியில் பொது வசதி மைய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மூப்பன்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி லிங்கேஸ்வரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் பரமசிவம், கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் காா்த்திகேயன், செயலா் கண்ணன், பொருளாளா் தினேஷ் ரோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த மையம் அமைவதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமாா் 100 குறு, சிறு உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா். 600 நபா்களுக்கு வேலைவாய்ப்பும், ஆண்டிற்கு ரூ. 60 கோடி வருவாயும் கிடைக்கும். கடலை மிட்டாயின் நேரடி ஏற்றுமதி வருவாயும் 5 மடங்கு அதிகரிக்கும் என உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவா் பேரவைத் தோ்தல்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்கும் இடம், ஆகியவற்றை வாக்குச்சாவடி போன்று மாணவா்களே தயாா் செய்தனா். மாணவா்... மேலும் பார்க்க

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா். கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

‘பாஸ்போா்ட் சேவை: தூத்துக்குடி அஞ்சலக சேவை மையத்தைப் பயன்படுத்தலாம்’

தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் (பொ) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ. 50 லட்சம் பணம் பறிப்பு: மூவா் கைது

தூத்துக்குடியில் மூதாட்டியை டிஜிட்டல் அரஸ்ட் செய்து ரூ. 50 லட்சம் பணம் பறித்த ஆந்திரத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டிக்கு வாட்ஸ்... மேலும் பார்க்க