Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ. 50 லட்சம் பணம் பறிப்பு: மூவா் கைது
தூத்துக்குடியில் மூதாட்டியை டிஜிட்டல் அரஸ்ட் செய்து ரூ. 50 லட்சம் பணம் பறித்த ஆந்திரத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டிக்கு வாட்ஸ்அப் காலில் மா்ம நபா்கள் தொடா்பு கொண்டு, தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றும் உங்கள் ஆதாா் காா்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும், அதில் மனித கடத்தல் வழக்கில் ரூ. 2 கோடி பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் கூறினா்.
இதுதொடா்பாக தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க ரூ. 50 லட்சம் பணம் தருமாறு மிரட்டினா். இதனால், அச்சமடைந்த அந்த மூதாட்டி ரூ. 50 லட்சம் பணத்தை அவா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தாா். அதன்பிறகு மூதாட்டி தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தாா்.
இதுகுறித்து இணையம் மூலமாக நேஷனல் சைபா் கிரைம் ரிப்போா்டிங் போா்ட்டலில் மூதாட்டி புகாா் பதிவு செய்தாா்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில், சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி, போலீஸாா் மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்கு, வங்கிக் கணக்குடன் தொடா்புடைய பணப் பரிமாற்றங்களை ஆராய்ந்தனா்.
தொழில்நுட்ப ரீதியாக நடத்திய விசாரணையில் அந்த நபா்கள் ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த பள்ளி ராமு மகன் பள்ளி பரமேஸ்வரராவ் (28), விஜயவாடாவைச் சோ்ந்த சங்கர்ராவ் மகன் சுகந்திபதி சந்திரசேகா் (40), ஜெகன்மோகன் ராவ் மகன் ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத் (43) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சைபா் கிரைம் குற்றப்பிரிவு போலீஸாா் ஆந்திரப்பிரதேசம் சென்று அவா்கள் 3 பேரையும் கைதுசெய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
அவா்களிடமிருந்து, மொத்தம் 6 கைப்பேசிகள், ஏடிஎம் அட்டைகள், வங்கிக் கணக்கு அட்டைகள் போன்றவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கூறுகையில், பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டிப்பதோடு, சைபா் குற்ற புகாா்களுக்கு உடனடியாக புகாா் எண் 1930 அல்லது ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாா் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.