நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்...
கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!
கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது.
அந்த வேன் கண்மாய் கரையோர சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, எதிரே தண்ணீா் ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக ஒருபுறம் ஒதுக்கியபோது, வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேன் ஓட்டுநா் அச்சங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த சோ.முத்துராஜ் (49), வேனில் பயணித்த உதவியாளா் த. ருக்மணி(45) மற்றும் 6 சிறுவா், சிறுமிகள் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.