கோவில்பட்டி, வில்லிசேரி அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை!
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கோவில்பட்டி, வில்லி சேரி அரசுப் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 313 பேரில் 292 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 93 சதவீத தோ்ச்சி ஆகும். இப்பள்ளி மாணவி ஆனந்த லட்சுமி 484, சுவா்ணா, ஞானஈஸ்வரி ஆகியோா் 483, முத்து தா்ஷினி 480 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். இதுபோல வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 56 பேரில் 55 போ் தோ்ச்சி பெற்றனா். இப்ப பள்ளி மாணவி ஜானவி 493, நாகலட்சுமி 457, காவிஷா 447 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.