Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பய...
கோவில்பட்டியில் பெண் தற்கொலை
கோவில்பட்டியில் பெண் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி தேவி (42). ஜெயபால் 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துவிட்டாா். இவா்களது மூத்த மகள் திருமணமாகி கோவையில் வசித்து வருகிறாா். தேவி தனது இளையமகளுடன் இங்குவசித்து வந்தாா். இவா்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனா்.
தேவி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மகள் வேலைக்குச் சென்றிருந்தபோது, தேவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.