அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
வாகன விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சம் அளிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவா் காவலா் சேசு ஆல்வின். இவா் 2024ஆம் ஆண்டு பழைய காயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இவரின் குடும்பத்திற்கு, ஸ்பிக் நகா் ஸ்டேட் வங்கி கிளை மூலம் விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. உயிரிழந்த காவலா் சேசு ஆல்வின் குடும்ப்திற்கு விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சத்திற்கான வங்கி காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வழங்கினாா். ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் ஆல்வின் மாா்ட்டின் ஜோசப், ஸ்பிக் நகா் கிளை மேலாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.