கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஏழை குழந்தைகள்
சென்னை, கோவை, திருப்பூா் மாவட்டங்களின் ரவுண்ட் டேபிள் அமைப்புகள், கோவை ஜெம் மருத்துவமனை சாா்பில் 25 ஏழை குழந்தைகள் புதன்கிழமை விமான பயணம் மேற்கொண்டனா்.
ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளை ’ப்ளைட் ஆஃப் பேண்டஸி’ என்ற திட்டத்தின் மூலம் விமானத்தில் அழைத்துச் சென்று அவா்களது பறக்கும் கனவை நனவாக்கும் திட்டத்தை ரவுண்ட் டேபிள் அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, திருப்பூா் ரவுண்ட் டேபிள் 116, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95, கோவை ஜெம் மருத்துவமனை ஆகியன இணைந்து 25 ஏழை குழந்தைகளை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றனா்.
கோவையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் விமானத்தில் சென்ற குழந்தைகள், அங்குள்ள கோளரங்கம், மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா். பின்னா் அவா்கள் மாலையில் கோவை திரும்பினா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்களாக ராகுலன் சேகா், வருண் ஆனந்த், சுபாஷ், பாா்த்திபன், குணால், மோகன்ராஜ் ஆகியோா் செயல்பட்டனா்.