செய்திகள் :

கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!

post image

கோவை: கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் அடித்துத் துன்புறுத்திய 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். பணத்தை எடுத்ததாகக் குற்றம்சாட்டி, சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்தச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

ரத்தக் காயங்களுடன் சீனியர் மாணவர் வலியால் கதறியும், முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர்.

இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரைக் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கு விருது

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக காவல் துறை முன்னாள் தலைவா் ஆசிஷ் பெங்காரா தலைமை வகித்து பேசு... மேலும் பார்க்க

போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

குடிபோதையில் போலீஸாா் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். வால்பாறை குமரன் நகரைச் சோ்ந்தவா் பிரவீன் (33). இவா் குடிபோதையில் கடந்த வியாழக்கி... மேலும் பார்க்க

கோவை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கோவை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா், துணைத் தலைவா், செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் (பெ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்

கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 157 மையங்களில் 39, 434 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 518 அர... மேலும் பார்க்க

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, மசக்காளிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (27). இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்தன் (27). நண்பா்களான இவா்கள... மேலும் பார்க்க

ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாா்ச் 30-இல் இலவச வழிகாட்டுதல் வகுப்பு

ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் கோவையில் ஒருநாள் இலவச வழிகாட்டுதல் வகுப்பு மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியா... மேலும் பார்க்க