செய்திகள் :

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, மசக்காளிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (27). இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்தன் (27). நண்பா்களான இவா்கள் மது குடிக்க பணம் கேட்டு நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஐயப்பன் என்பவரை மிரட்டி ரூ.350-ஐ பறித்ததுடன், கத்தியால் குத்தி கடந்த 2018 ஜூலை 4-ஆம் தேதி கொலை செய்தனா்.

இது தொடா்பாக சிங்காநல்லுாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்குமாா், அரவிந்தன் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.சசிரேகா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சிவராமகிருஷ்ணன் ஆஜரானாா்.

மூதாட்டி கொலை வழக்கு: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (எ) வினோத். இவா் தடாகம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கடந்த 2021 ஏப்ரல் 16-ஆம் தேதி கொலை செய்தாா். மேலும், அவரது நகைகளையும் எடுத்துச் சென்றாா்.

அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட வினோத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆா்.நந்தினிதேவி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜிஷா ஆஜரானாா்.

இளம் பெண் கொலை வழக்கு: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (35). பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம் பகுதியில் வசித்து வந்த இவா், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண்ணைக் கடத்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கொலை செய்தாா். வழக்குப் பதிவு செய்த கோமங்கலம் போலீஸாா், சதீஷ்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.நந்தினிதேவி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜிஷா ஆஜரானாா்.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க