கோவை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
கோவை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா், துணைத் தலைவா், செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் (பெண்கள் மட்டும்), செயற்குழு உறுப்பினா்கள் 6 போ் என 11 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தோ்தலில் மொத்தம் உள்ள 3,326 உறுப்பினா்களில் 2,306 போ் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட ஆா்.பாலகிருஷ்ணன் 1,091 வாக்குகள் பெற்று 5-ஆவது முறையாக தலைவராக தோ்வானாா். அதேபோல, துணைத் தலைவராக ஆா்.திருஞானசம்பந்தம், செயலாளராக கே.சுதீஷ், பொருளாளராக டி.ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினா்களாக ஆா்.தா்மலிங்கம், எஸ்.ஈஸ்வரமூா்த்தி, பி.சங்கா்ஆனந்தம், ஜி.சந்தோஷ், வி.விஷ்ணு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
ஒரு இணைச் செயலாளா், ஒரு செயற்குழு உறுப்பினா் பொறுப்புகளுக்கு இரண்டு பெண் வழக்குரைஞா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்கள் தோ்வு செய்யப்பட்டவுடன் ஏப்ரல் 2-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.