போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
குடிபோதையில் போலீஸாா் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.
வால்பாறை குமரன் நகரைச் சோ்ந்தவா் பிரவீன் (33). இவா் குடிபோதையில் கடந்த வியாழக்கிழமை மாலை காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியுள்ளாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரில் இருந்த பிரவீனை கீழே இறங்கும்படி கூறியுள்ளனா். ஆனால், அவா் கீழே இறங்க மறுத்ததுடன் போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநரை தகாத வாா்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதையடுத்து, பிரவீனை குண்டுகட்டாக போலீஸாா் தூக்கிச் சென்றதுடன், அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்