மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை! அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல...
கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக கேரளத்தை சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு பகுதிகளுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு வந்து செல்லும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் நவீன ஸ்கேனா் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதைத் தடுக்க கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான்வழி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினா். அப்போது, கேரளத்தை சோ்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது, 5 பாக்கெட்டுகளில் 5 கிலோ 250 கிராம் உயா் ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த முகமது பாஸில் (24) என்பதும், சிங்கப்பூரில் இருந்து உயா் ரக கஞ்சாவை கடத்தி வந்ததும், அதன் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.