அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம்...
கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மின்னஞ்சல் வந்தது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தின் அனைத்து மென்பொருள்களும் (சாஃப்ட்வோ்) முடக்கப்பட்டுள்ளதாகவும் (ஹேக்) தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
வாகனங்கள் நிறுத்தும் பகுதி, பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நீண்ட நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மா்ம நபா் குறித்து பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.