நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்
சக்தித் திருமகன் டீசர்!
நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.
இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.
இதையும் படிக்க: புதிய தோற்றத்தில் நகுல்!
கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராகவும் விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.