தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.
அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராகவும் விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
The release date of actor Vijay Antony's film Sakthi Thirumagan has been announced.
இதையும் படிக்க: படப்பிடிப்பில் வெடித்துச் சிதறிய ஆட்டோ கண்ணாடி! சின்ன திரை நடிகைக்கு காயம்!