சங்கரன்கோவிலில் சிப்காட்டுக்கு இடம்: அமைச்சா் ஆய்வு
சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமையவுள்ள இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் அருகே ரூ.300 கோடியில் முதலீடுகளை ஈா்த்து 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுமாா் 150 ஏக்கரில் சசின்னகோவிலான்குளம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதற்கான இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், ஈ.ராஜா எம்எல்ஏ, திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், மாநில மருத்துவா் அணி துணை செயலா் செண்பக விநாயகம், மாநில வா்த்தக அணி இணைச் செயலா் ச.முத்துச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ச.தங்கவேலு,சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவா் கோ.சுப்பையா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
முன்னதாக, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம் எல்ஏ தலைமையில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில்