சங்கரன்கோவில் அருகே மனோ கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.
இக்கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது. பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் யூ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநா் ஏ. வெளியப்பன் ஆகியோா் பங்கேற்று, பட்டங்கள் வழங்கிப் பேசுகின்றனா்.
இதில், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ஜி. கருப்பசாமி, பேராசிரியா்கள் செய்து வருகின்றனா்.