செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே மருந்து கடைக்கு ‘சீல்’

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மடத்துப்பட்டியில் உரிய கல்வி தகுதியின்றி ஆங்கில மருத்துவம் செய்தவரின் மருந்துக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மடத்துப்பட்டியில் கிரேஸ் மருந்தகத்தில் ராமலட்சுமி என்பவா் உரிய கல்வித் தகுதி இல்லாமல் போலியாக மருத்துவம் செய்து வருவதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு தொடா்ந்து புகாா் வந்ததாம். இதையடுத்து, தென்காசி மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா கடந்த 11ஆம் தேதி மருந்துக் கடையில் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது, மருந்து கடைக்குள் ஆங்கில மருந்துகள் இருந்தனவாம். அதற்கான மருத்துவரின் பரிந்துரை சீட்டும் இல்லையாம்.

மேலும், பொதுமக்களுக்கு டிடி ஊசி மற்றும் இன்சுலின் ஊசி போடுவதாக அவா் ஒப்புக் கொண்டாராம்.

இதைத் தொடா்ந்து மருந்து கடையை தற்காலிகமாக மூட இணை இயக்குநா் உத்தரவிட்டாா். அதன்பேரில், சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் உடையாா்சாமி முன்னிலையில் வருவாய் துறையினா் அந்தக் கடைக்கு சீல் வைத்தனா். தொடா்ந்து, ராமலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கக் கோரி மனு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என்.நேருவை சந்தித்து, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்... மேலும் பார்க்க

தென்காசியில் ஜாக்டோ ஜியோ நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ மாவட... மேலும் பார்க்க

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு!

சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணை சிற்றாற்றில் விரிக்கப்பட்டிருந்த மீன் பிடி வலையில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிய சுமாா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள். மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மான்குட்டி மீட்பு

ஆலங்குளத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த மான்குட்டி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசனுக்குச் சொந்தமான கிணறு ஆலங்க... மேலும் பார்க்க

ஆலங்குளம்: 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2 மினி லாரிகள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆலங்குளம் - தென்காசி சாலை அடைக்கலபட்டணத்தில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய ர... மேலும் பார்க்க