சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூா் சாலை வழியாக மணி நதியை அடைந்தது.
இதேபோல, பூட்டை , பாவளம், தேவபாண்டலம் பகுதியில் இருந்து புறப்பட்ட மற்றொரு சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய சாலை வழியாக சங்கராபுரம் மணி நதியை அடைந்தது.
இதில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.