செய்திகள் :

சஞ்சுவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த ஸ்ரீசாந்த்; 3 ஆண்டுகள் தடை விதித்த KCA; பின்னணி என்ன?

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கேரளா உள்ளூர் கிரிக்கெட் அணியான ஏரீஸ் கொல்லம் சைலர்ஸ் (Aries Kollam Sailors) அணியின் இணை உரிமையாளருமான ஸ்ரீசாந்த் இனி கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA) தொடர்பான எந்தவொரு செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது கூடாது 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரையில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர் உள்ளூர் போட்டி) தொடருக்கான கேரளா அணியிலிருந்து சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட்டார்.

பின்னர், பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாததற்கு, விஜய் ஹசாரே டிராபிக்கான கேரளா அணியிலிருந்து அவர் கழற்றிவிடப்பட்டதே காரணம் என்று பேச்சுக்கள் அடிபட்டது.

இந்த விவகாரத்தில் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், KCA மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஸ்ரீசாந்த் - சஞ்சு சாம்சன்
ஸ்ரீசாந்த் - சஞ்சு சாம்சன்

இன்னொருபக்கம், தனியார் ஊடக நேர்காணலில் ஸ்ரீசாந்த், "நமது மாநிலத்துக்காக விளையாட எதற்காக வெளி மாநிலங்களிலிருந்து வீரர்களை அழைத்து வருகிறது KCA? இது நம் மலையாள வீரர்களுக்கு அவமரியாதை.

சர்வதேச அளவில் நமக்கு இருக்கும் ஒரே வீரர் சஞ்சு மட்டும்தான். அவரை நாம் ஆதரிக்க வேண்டும். சஞ்சுவுக்குப் பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரைக்கூட KCA உருவாக்கவில்லை.

சச்சின் பேபி, நிதிஷ், விஷ்ணு வினோத் போன்ற சிறந்த வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால், KCA அவர்களை உயர்மட்ட அளவில் விளையாடவைக்கிறதா?" என்று KCA-வை குற்றம்சாட்டினார்.

இதனால், பிப்ரவரியில் KCA தரப்பிலிருந்து ஸ்ரீசாந்த்துக்கு, கொல்லம் சைலர்ஸ் அணியின் இணை உரிமையாளராகத் தனது ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காகவும், தவறான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காகவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், ஏப்ரல் 30-ம் தேதி கொச்சியில் நடைபெற்ற KCA சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், KCA தொடர்புடைய செயல்பாடுகளிலிருந்து ஸ்ரீசாந்த்தை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA)
கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA)

இது குறித்து KCA, "சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக ஸ்ரீசாந்த் உட்பட கொல்லம் ஏரீஸ், ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அணிகள் திருப்திகரமான பதில்களை அளித்ததால், அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேசமயம், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அணி நிர்வாகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. " என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், சஞ்சுவின் பெயரில் கிரிக்கெட் சங்கத்தின்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததற்காக சாம்சன் விஸ்வநாத் உள்ளிட்டோரிடமிருந்து இழப்பீடு கோரவும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Kohli: `RCB-யில் ஆரம்ப நாள்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வீரர்' - நினைவுகள் பகிரும் கோலி

ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆகியிருக்கும் பெங்களூரு அணி அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தி... மேலும் பார்க்க

IPL 2025: "உங்கள் அணி கோப்பை வெல்லாதபோது, நீங்கள் 800 ரன்கள் அடித்தாலும் பயன் இல்லை" - ரோஹித் சர்மா

ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா, இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி வருகிறார். சமீபத்திய பேட்டியில், பெரிய தொடர்கள் குறித்த அவரது அணுகுமுறை குறித்து பேசியுள்ள... மேலும் பார்க்க

Virat Kohli: `நீ சிங்கம் தான்...' - பகிர்ந்த கோலி; நெகிழ்ந்த STR; வைரலான பதிவு

நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது விருப்பமான பாடல் குறித்து பேசிய வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. IPL2025 சீசனில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ரா... மேலும் பார்க்க

CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' - என்னென்ன தெரியுமா?

'சென்னை vs பஞ்சாப்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்ப... மேலும் பார்க்க

Dhoni : 'நான் அடுத்தப் போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது!' - ஓய்வு பெறுகிறாரா தோனி?

'சென்னை vs பஞ்சாப்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் வென்றிருந்தார்.... மேலும் பார்க்க