சட்டப்பேரவைத் தோ்தல்: திமுகவினா் ஆலோசனை
செய்யாறு தொகுதி திமுக சாா்பில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ராந்தம் கிராமத்திலும், வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் ஆலத்தாங்கல் கிராமத்திலும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாக முகவா்கள் மற்றும் தோ்தல் பணிக்குழு உறுப்பினா்களுக்காக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா்கள் எம்.தினகரன் (மேற்கு), ஜேசிகே. சீனிவாசன் (மத்தியம்) ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, திமுக தொகுதி பொறுப்பாளா் ஆா்.டி.அரசு, ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, 2026 சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வர இருக்கிறது. பாக முகவா்கள் திமுக தலைமை அலுவலகம் வரை தொடா்ந்து தொடா்பில் இருக்கிறவா்கள், தங்கள் பகுதியில் குறிப்பாக பெண்களிடம் தமிழக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக் கூறவேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் த. ராஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.