செய்திகள் :

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

post image

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய வங்கதேசத்தினர் 15 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் அகமதாபாத் குற்றப்பிரிவு காவல் துறையினர் சதோலா ஏரி சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஒரு சிறுமி உள்பட 50 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டை உள்பட போலியான இந்திய ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், வங்கதேசத்து பெண்களையும் சிறுமிகளையும் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றமைப்பை அம்மாநில அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

இந்நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் சமூக விரோதிகளின் அழுத்ததினால் அகமதாபாத்தில் தங்கியிருந்ததுடன், கட்டாயப்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பின்னர், அவர்களிடம் வங்கதேச ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணித் துவங்கியது.

தற்போது வங்கதேசத்தின் தூதரகம் 15 பேரது குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கியதைத் தொடர்ந்து ஒரு குழந்தை உள்பட 15 பேர் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், மீதமுள்ள 35 பேரையும் வருகின்ற மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் சட்டவிரோதமாக வங்கதேசத்து பெண்களை இந்தியாவிற்குள் அழைத்து வரும் தரகர்கள் அவர்களை பாலியல் தொழிகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வரும் பணத்தை வர்த்தகம் எனும் பேரில் வங்கதேசத்துக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர். அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் வலது சாரி தலைவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியாவின் தீவிர வலது சாரி தலைவரான ஹெர்பெர்ட் க... மேலும் பார்க்க

தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளி... மேலும் பார்க்க

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க