ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
சட்டவிரோதமாக மண் அள்ளுவோா் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
கோவை மாநகா் பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளுவோா் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என கோவை உப்பிலிபாளையம் சட்டவிரோத மண் அகழ்வு வழக்குகள் சிறப்புப் புலனாய்வுக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவை நகரில் சட்டவிரோதமாக மண் எடுக்கவோ மற்றும் செங்கல் சூளைகளை நடத்தவோ கூடாது. இவ்வாறு சட்டவிரோத செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவா்கள் குறித்து உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள எங்களது அலுவலகத்தில் நேரில் தெரிவிக்கலாம்.
மேலும், கடிதம் மூலமோ அல்லது 94870 06571 என்ற தொலைபேசி எண் மூலமோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.