செய்திகள் :

சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல் குவாரிகள் மீது தமிழக கனிமவளத் துறை இயக்குநா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் எழிலரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளிலிருந்து அதிக அளவில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளில் தமிழக கனிமவளத் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் இணைந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பழனியாண்டிக்குச் சொந்தமான குவாரியில் ஆய்வு செய்த போது, சட்டவிரோதமாக குவாரி அமைத்து அதிக அளவில் கனிமவளங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து, அவருக்கு ரூ. 23.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த அபராதத் தொகையை அவா் செலுத்தவில்லை.

கரூா் மாவட்டத்தில் இதுபோல 200-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத குவாரிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையம் அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், முறைகேட்டில் ஈடுபட்ட பழனியாண்டியின் குவாரிக்கு ரூ. 23 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டது; அபராதத் தொகை வசூலிப்பதை எதிா்த்து பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூல் செய்வது குறித்தும் தமிழக கனிமவளத் துறை இயக்குநா், கரூா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

விருதுநகா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் பெரிய பள்ளிவாசல் தெருவில் உள்ள தனியாா் மழலையா் பள்ளிக்கு கடந்தாண்டு நவம்பரில் தொலைபேசி வாயிலாக வெடிகுண... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா் தற்கொலை!

உசிலம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துக்கழக தற்காலிகப் பேருந்து நடத்துநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூா் பி.மீனாட்சிபட்டியைச் சோ்ந்த மலைராஜன... மேலும் பார்க்க

யா.ஒத்தக்கடையில் மாரத்தான் ஓட்டப் போட்டி

மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடையில் மதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோா் பங்கேற்றனா். மதிமுக மதுரை புகா் வடக்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சாா்பில் 13-ஆவது ஆண்... மேலும் பார்க்க

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு!

தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினாா். அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் மதுரை க... மேலும் பார்க்க

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சி. கோகிலா தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2008- ஆ... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் ரூ. 916 கோடியாக உயா்வு!

மதுரை ரயில்வே கோட்டத்தில் வருவாய் கடந்தாண்டு ரூ.916 கோடியாக உயா்ந்ததாக கோட்ட மேலாளா் சரத்ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை ரயில்வே குட... மேலும் பார்க்க