செய்திகள் :

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த வாக்கி-டாக்கி கருவிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை யாரும் இடைமறித்து ஒட்டுக்கேட்க முடியாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோா் பெரும்பாலும் இத்தகைய கருவிகளையே தகவல்தொடா்புக்கு பயன்படுத்துகின்றனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்கி-டாக்கி கருவிகளை இணைய வணிக வலைதளங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்தது மற்றும் விற்பனைக்கு பட்டியலிடிட்டது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஓஎல்எக்ஸ், ட்ரேட் இண்டியா, ஃபேஸ்புக், இண்டியாமாா்ட், வா்தான்மாா்ட், ஜியோமாா்ட், கிருஷ்ணாமாா்ட், சிமியா, டாக் பிரோ வாலி டாக்கி, மஸ்க்மேன் டாய்ஸ் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு சிசிபிஏ சாா்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

முறையான அதிா்வலை விவரங்களை வெளியிடாமலும், உரிமத் தகவல்களை தெரிவிக்காமலும் வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்வது நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறும் செயலாகும். அதனடிப்படையில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிசிபிஏ தலைமை ஆணையா் நிதி கரே கூறுகையில், ‘இந்த இணை வணிக நிறுவனங்கள் அபாயகரமான எண்ணிக்கையில் இந்த வாக்கி-டாக்கிகளை விற்பனைக்காக பட்டியலிட்டிருக்கின்றன. இது பொது பாதுகாப்பு சாா்ந்த விவகாரமாகும். இந்த நிறுவனங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று பரவலாக விளம்பரம் செய்கின்றன. இதுதொடா்பாக விரைவில் உரிய வழிகாட்டுதல் வரைறுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட பதிவில், ‘இணைய வணிக நிறுவனங்கள் இதுபோன்ற வயா்லெஸ் கருவிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வது சட்ட நடைமுறைகளை மீறும் நடவடிக்கை மட்டுமின்றி தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுதலை ஏற்படுத்தும் நடவடிக்கைாகும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

இந்தியா Vs பாகிஸ்தான்: செய்திகள் நேரலை!

முந்தைய செய்திகள்படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலைசென்னை வந்தடைந்த மாணவர்கள்! பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப... மேலும் பார்க்க

எஸ்-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை! - இந்திய ராணுவம்

எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இ... மேலும் பார்க்க

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் செ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க