சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டு பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் வருவாய் மாவட்டத்தைப் பொருத்து குடியிருப்பு மற்றும் விளைநிலப் பகுதிகளுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பினை சீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட சந்தை மதிப்புவழிகாட்டி துணைக்குழு கூட்டத்தில் அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு மாவட்டத்தில் உள்ள வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்கள், சாா் பதிவாளா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்மீது ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.