செய்திகள் :

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!

post image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆறாட்டு விழாவுக்காக நாளை(ஏப். 1) நடை திறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நாள்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, மாசி மாத பூஜைக்காக பிப். 12 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப். 17 அன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

ரத்தினகிரி: சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன்

பங்குனி மாத கிருத்திகையையொட்டி, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன். மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்...

விக்கெட் கீப்பிங் செய்யும் அளவுக்கு சஞ்சு சாம்சன் உடற்தகுதி பெற்றுவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாதெமி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு அவா் திரும்புகிறாா். இதுவ... மேலும் பார்க்க

எம்புரான் சர்ச்சை: தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் படத்திற்கு தமிழகத்திலும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. லூசிப... மேலும் பார்க்க

டாக்ஸிக் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா!

யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’.கேஜிஎஃப... மேலும் பார்க்க

வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.முழுநீள நகைச்சுவைத் திரை... மேலும் பார்க்க