40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கச்சத்தீவை மீட்க பேரவையில் தீா்மானம்: பிரேமலதா வரவேற்பு
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கச்சத்தீவை மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீா்மானத்தை எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக மீனவா்கள் தங்கள் வாழ்க்கை, உயிா், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து வருகின்றனா். எனவே, கச்சத்தீவுக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, அப்பகுதியை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஒப்பந்தத்தை பிரதமா் மோடி இலங்கை செல்லும்போது உறுதி செய்ய வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளாா்.