40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக, எக்ஸ் தளத்தில் முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் இணைந்து பிரதமரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரதமரைச் சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான எங்கள் கவலைகளைத் தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.
ஏற்கெனவே, இது தொடா்பாக பிரதமருக்கு கடந்த 27-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டபடி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நம்முடைய ஒன்றுபட்ட நிலைப்பாட்டைத் தெரிவிக்க, பிரதமரை உடனடியாகச் சந்திக்கக் கோருகிறோம். அவரது விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.