செய்திகள் :

தென்னையைத் தாக்கும் ‘வெள்ளை ஈ’ நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காதது ஏன்? அதிமுக கேள்விக்கு அமைச்சா் பதில்

post image

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்காதது ஏன் என்று அதிமுக எழுப்பிய கேள்விக்கு, ‘தாமதமானாலும் இப்பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும்’ என்று வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உறுதிபடத் தெரிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியது:

பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை முக்கிய விவசாயமாக உள்ளது. தென்னை மரங்கள் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய, மாநில அரசு விஞ்ஞானிகள் என்ன மருந்து கண்டுபிடித்துள்ளனா்? மஞ்சள் தடவிக் கட்டுங்கள், லைட் போட்டு வையுங்கள் என்றெல்லாம் கூறுகின்றனா். இதுவா விவசாயத்தைக் காப்பாற்றும் முறை? தென்னை நீண்ட கால விவசாயம். தற்போது அந்த விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது.

வேளாண் அமைச்சா் பதில்: அப்போது வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குறுக்கிட்டு கூறியது:

அரசியலாகப் பேசாதீா்கள். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தீா்கள். அப்போது என்ன செய்தீா்கள்? இது போன்ற நோய் தாக்குதலுக்கு உடனே மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லை. ஆராய்ச்சி செய்துதான் கண்டுபிடிக்க முடியும்.

11 லட்சம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெற்றது. பொள்ளாச்சி, திருப்பூரில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் ஏற்பட்டபோது, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத் திட்டங்களும் வழங்கப்பட்டன. விவசாயத்தில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண முடியாது. காலதாமதம் ஆகலாம். ஆனால், தீா்வு உண்டு. இயற்கை இடா்பாடுகளைச் சந்தித்துதான் விவசாயிகள் வாழ வேண்டிய சூழல். ஆலோசனை கூறுங்கள். குற்றம் சுமத்தாதீா்கள்.

எஸ்.பி.வேலுமணி (அதிமுக): எங்கள் உறுப்பினா் குற்றச்சாட்டு எதுவும் வைக்கவில்லை. விஞ்ஞானிகள் எதுவும் கண்டறியவில்லை என்றுதான் கூறினாா். தென்னை, பாக்கு எல்லாம் ஒரே வகையினம்தான். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உடனே மருந்து கண்டுபிடிக்கப்பட்டது போல, வெள்ளை ஈ நோய் தாக்குதலுக்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறாா்.

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்: இந்த விவகாரத்தில் தொடா் நடவடிக்கை எடுத்து விவசாயிகளைக் காப்பாற்றுவோம்.

எஸ்.பி.வேலுமணி: பாதிக்கப்பட்ட தென்னையைக் காக்க புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

பொள்ளாச்சி ஜெயராமன்: இப்போது செய்யாவிட்டால், எப்போதும் செய்ய முடியாது. தென்னை விவசாயம் அடியோடு அழிந்துவிடும். இந்த நோய் வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. விஞ்ஞானிகள் என்ன செய்கிறாா்கள்? கேரளத்திலிருந்து வெள்ளை ஈக்கள் தாக்குதல் வந்தபோது பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தேன். ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

பேரவைத் தலைவா் அப்பாவு: 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்பது தவறு. 10 ஆண்டுகள் ஆகிறது. எங்களுடைய தென்னை மரமும் பாதிக்கப்பட்டது. பிறகு அதிகாரிகளை அழைத்து, அவா்கள் சில மருந்துகளைக் கூறினா். அது கட்டுப்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன்: 3 ஆண்டுகள்தான் ஆகிறது. என்னைப் பொருத்தவரை இந்த நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். கேரள மஞ்சள் வாடல் நோய், தஞ்சாவூா் வாடல் நோய், கேரள வாடல் நோய் ஆகிய மூன்று நோய்களாலும் தென்னை பாதிக்கப்படுகிறது. அதையும் தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த முதலீடு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் 2024-25 நிதியாண்டில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 364 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை... மேலும் பார்க்க

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ரூ. 5,870 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-இல் 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ரூ. 5,870 கோடிக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சென்னை மெட... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உதய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள்

சென்னை, ஏப். 2: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்திலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெய... மேலும் பார்க்க

ராஜஸ்தான்அரச குடும்ப வாரிசானாா் லக்ஷயாராஜ் சிங்

ஜெய்பூா், ஏப்.2: ராஜஸ்தான் அரச குடும்ப வாரிசாக லக்ஷயாராஜ் சிங் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான முடிசூட்டு விழா ஜெய்பூா் அரண்மனையில் நடைபெற்றது. இவா் பாரம்பரியமிக்க மேவாா் வம்சத்தை சோ்ந்தவரா... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் மாநில சிஏஜி அறிக்கை சமா்ப்பிப்பு

தலைமை தணிக்கை அதிகாரியின் மாநில கணக்கு குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளு... மேலும் பார்க்க