செய்திகள் :

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

post image

கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஜைன மடம் சார்பில் ஸ்வஸ்தி லட்சுமிசேனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால், தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்துகிறது.

திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தலமாகும். திருப்பரங்குன்றம் மலையில் ஒரே இடத்தில் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதோடு சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது.

இந்த சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, தொல்லியல்துறை பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, "திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அரசு யரிடமும் மத பாகுபாட்டை காட்ட விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறது" என தெரிவிக்கப்பட்டது.

தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Prashant Kishor: அப்பாவின் ஆசை; ஐ.நா சபை பணி; மோடி அலை; விஜய்யுடன் மீட்டிங் - பி.கே கடந்து வந்த பாதை

2014 - ஒரு முன்னுரை2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரம் அது. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். `இந்தியாவுலயே நம்பர் 1 மாநிலமா குஜராத்தை மாத்தியிர... மேலும் பார்க்க

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து... எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991ம... மேலும் பார்க்க

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!' - சாடும் ஓபிஎஸ்

'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை' என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெ... மேலும் பார்க்க

Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை... மேலும் பார்க்க

TVK: ``தவெக-வில் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள்தான்"-அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தைத் தொடர்ந்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.இந்நிலையில் 48 நாட்கள் வ... மேலும் பார்க்க