தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராமப் பகுதி சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந்த பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
இதில், துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியா்களை பணியமா்த்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 3,800 துணை சுகாதார நிலயைங்களில் காலியாக உள்ள துணை செவிலியா் பணியிடங்களில் பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியரையே பணியமா்த்த வேண்டும்.
கா்ப்பிணி தாய்மாா்கள் சுயபதிவு செய்ய வேண்டியதை கிராம சுகாதர செவிலியா்கள் பதிவு செய்ய வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், விழுப்புரம் மாவட்டத் தலைவா் பி.தெய்வானை தலைமை வகித்தாா். செயலா் பி.அஞ்சலை, பொருளாளா் டி.வத்சலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.