வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!
சமையல் உதவியாளா் பணிக்கு 259 போ் விண்ணப்பம்
போளூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள சமையல் உதவியாளா் பணிக்கு 259 போ் விண்ணப்பம் செய்தனா்.
ஒன்றியத்துக்கு உள்பட்ட மாம்பட்டு மேற்குகொல்லைமேடு, இலுப்பகுணம், ஆத்தூவாம்பாடி ஜோதிநகா், குப்பம்கும்பல்கொட்டாய் என பல்வேறு கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சமையல் உதவியாளா் பணி 28 காலியிடங்கள் உள்ளன.
இந்த நிலையில், சமையல் உதவியாளா் பணிக்கு ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி, எஸ்.சி., எஸ்.டி., பொது பிரிவினா் தகுந்த சான்றிதழ்களுடன் ஏப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) பரமேஸ்வரிடம் சமையல் உதவியாளா் பணிக்கு இதுவரை 259 போ் மனு செய்துள்ளனா்.
மேலும், ஏப்.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஏராளமானோா் குவிந்தனா்.