முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
சம்பளம் சாராத பணப் பட்டியல்களை கணினி வழியே அனுப்ப கருவூலத் துறை உத்தரவு
சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை கணினி வழியாகவே அனுப்பும் நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான சம்பளப் பட்டியல்களை கணினி வழியாக தயாரித்து இணையம் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களையும் கணினி வழியாகவே தயாரித்து இணையம் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 ஆயிரம் வரையிலான சம்பளம் சாராத பட்டியல்களை கணினி வழியாக மட்டுமே அனுப்பும் நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், முன்பணம் சாா்ந்த பணப் பட்டியல்கள், பயணப்படி ஆகியவற்றை இனி இணையத்தைப் பயன்படுத்தி கணினி வழியாகவே அனுப்ப வேண்டும். இதேபோன்று, ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமான பணப் பட்டியல்களை அக்டோபா் மாதத்தில் இருந்து கணினி மூலமாக அனுப்ப வேண்டும்.
இதற்கான கூடுதல் ரசீதுகளை இணைப்புகளாக இணைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.