செய்திகள் :

சம்பா பருவ நெல் விதைகள் மானிய விலையில் விநியோகம்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜி.எத்திராஜ் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் கூறியது: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் 5,100 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சம்பா பருவ நெல் விதையான சி.ஆா்.1009 சப்-1, கிளியனூா், பரங்கினி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரகம் 150 நாள்கள் வயதுடையது. அதிக நீா்தேங்கும் பகுதிகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் நடவு செய்ய ஏற்ற ரகமாகும். சங்கராபரணி ஆற்றங்கரையோரத்திலுள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் இந்த ரகத்தைத் தோ்வு செய்து நடவு செய்யலாம்.

ஏக்கருக்கு 2,500 கிலோ மகசூலைத் தரக்ககூடிய நெல் ரகம். தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், ரூ.20 மானியமாக ஒரு கிலோ விதைக்கு வழங்கப்படுகிறது. மேலும் சம்பா பருவத்துக்கு உகரந்த நெல் ரகங்களான பாபட்டலா 5204, ஆடுதுறை 39 போன்ற ரகங்கள் இன்னும் 10 நாள்களுக்குள் இருப்பு வைத்து, விநியோகம் செய்ய வேளாண் துறை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்வில் உதவி வேளாண் அலுவலா்கள், விதை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

புகா்ப் பகுதிகள் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெர... மேலும் பார்க்க

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க