செய்திகள் :

சரிவில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி!

post image

தொடர்ந்து இரண்டு நாள்கள் ஏற்றத்திற்குப் பின் பங்குச்சந்தை இன்று(நவ. 7) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை
80,563.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.37 மணி நிலவரப்படி, செக்செக்ஸ் 756.12  புள்ளிகள் குறைந்து 79,622.01 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.20 புள்ளிகள் சரிந்து 24,222.85 புள்ளிகளில் உள்ளது.

இதையும் படிக்க | கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதினம்!

ஊடகத் துறையைத் தவிர ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், ஐடி என மற்ற அனைத்துத் துறைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.

நிஃப்டி 50 -ல் அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும்

ஹிண்டால்கோ, அதானி என்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவையும் சந்தித்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள் இன்று இறக்கம் கண்டு வருகின்றன.

சோனி இந்தியா வருவாய் 20.6% அதிகரிப்பு!

நுகர்வோர் மின்னணு தயாரிப்பாளரான சோனி இந்தியாவின் லாபம் 22.18 சதவிகிதம் உயர்ந்து ரூ.167 கோடியாகவும், அதன் செயல்பாட்டு வருவாய் 20.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.7,663.74 கோடியாகவும் உள்ளது என்று வணிக நுண்ணறி... மேலும் பார்க்க

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் சரிவு!

புதுதில்லி: பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 52.7% சரிவடைந்தது ரூ.12.90 கோடியாக குறைந்துள்ளது.இதுகுறித்து பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறு... மேலும் பார்க்க

சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மாா்ட் போன்கள்

இந்திய அறிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ரகங்களின் பங்களிப்பு நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 81 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,793 கோடி!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் 2024 காலாண்டு நிகர லாபம் ரூ.3,793.02 கோடியாக உள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.செப்டம்பர் 2023 உடன... மேலும் பார்க்க

மேக்ஸ் ஹெல்த்கேர் 2வது காலாண்டு லாபம் 2% உயர்வு!

புதுடில்லி: மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 1.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.281.81 கோடியாக உள்ளது.கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அதன் லாபம் ரூ.276.68 கோடியா... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.759 கோடி!

புதுதில்லி: டாடா ஸ்டீல் நிறுவனம், செப்டம்பர் 2024 காலாண்டில் நிகர லாபமாக ரூ.758.84 கோடி ஈட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.கடந்த 2023-24 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.6,... மேலும் பார்க்க