சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்ட கௌதம் ராம் கார்த்திக்..!
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தன் மீதான் சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்டு, அதற்கான விளக்கமும் அளித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சமீபத்தில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என மாற்றினார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2013-இல் கடல் படத்தில் அறிமுகமானார்.
முதல்படமே தோல்விப் படமாக அமைந்தது. இருப்பினும் அடுத்து வை ராஜா வை படத்தின்மூலம் மீண்டார். ரங்கூன், இருட்டு அறையில் முரட்டு குத்து படங்கள் வெற்றிப் பெற்றன.
முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் நடிக்கும்போது மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்தார்.
சமீபகாலமாக இவரை இயக்குநர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், தனது புதிய மேலாளர் பெயரைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
எனக்குத் தொடர்ச்சியாக வரும் சில பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக பலரும் என்னைத் தொடர்புகொள்ள முயன்று முடியாமல் போனதாகக் கூறினார்கள். இந்தக் குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைக் கூறுகிறேன்.
2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து என்னுடைய மேலாளராக கோபிநாத் திரவியம் இருக்கிறார்.
என்னைத் தொடர்புகொள்வதில் யாருக்காவது சிரமம் ஏற்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து வேலை செய்ய காத்திருக்கிறேன்.
