ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
இதையும் படிக்க: இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்
அவர் முதல் முறையாக கடந்த 2023 ஆம் ஆண்டில் ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், மீண்டும் ஐசிசியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
ஹாசிம் ஆம்லா கூறுவதென்ன?
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு ஷுப்மன் கில் என்ற மிகச் சிறந்த வீரர் கிடைத்துள்ளார். அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக சில ஆண்டுகளாக அந்த வேலையை ரிஷப் பந்த் சிறப்பாக செய்து வருகிறார். தென்னாப்பிரிக்க அணிக்காக ரியான் ரிக்கல்டான் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாட்டின் அணிகளுக்கும் 2-3 சிறப்பான வீரர்கள் கிடைப்பார்கள்.
இதையும் படிக்க: கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்: வெங்கடேஷ் ஐயர்
அதேபோல, ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு சிறந்த இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் உருவாகிறார். அந்த வகையில் ஷுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்து மிகப் பெரிய வீரராக உருவெடுத்துள்ளார். ஷுப்மல் கில் மிகவும் அற்புதமான வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மிகவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்திய அணிக்காக முன்வரிசையில் ஷுப்மன் கில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிரணிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். அடுத்து 3-வது இடத்தில் விராட் கோலியும் இருக்கிறார் என்றார்.