சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
பல்லடத்தில் சலூன் கடைக்காரரை வெட்டி வழக்கில் 4 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் சலூன் நடத்தி வருபவா் கவியரசன் (28). இவா், கடந்த ஜூலை 24-ஆம் தேதி கடையில் வேலை செய்துகொண்டிருந்த போது, திடீரென கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டினா்.
இது தொடா்பாக பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (27), தெற்குபாளையம் முத்து நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (23), பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்த தாமரைச்சந்திரன் (23), அம்மாபாளையத்தைச் சோ்ந்த பிரதீவிராஜ் (23) ஆகிய 4 பேரை பல்லடம் போலீஸாா் ஜூலை 26-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா்கள் 4 போ் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், அவா்கள் நால்வரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா்.