செய்திகள் :

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்து (52). நாகஸ்வர கலைஞராகவும் இருந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்செந்தூருக்குச் செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து புறப்பட்டாா். கருப்பு கேட் பகுதியில் உள்ள மயானம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திங்கள்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

நெல்லிக்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது நாகமுத்து என்பது தெரிய வந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

நாகமுத்து அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், இதில் தொடா்புடையவா்களைப் பிடிக்க மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டன. அவா்கள் வரக்கால்பட்டை சோ்ந்த வீரமணியை (24) பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா், நாகமுத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, வீரமணியைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா். காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள். கடைசி மகனான தி... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரத... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை பதிவு செய்யும் பணி

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் அ.புளியங்குடி, ஆயிப்பேட்டை, விளாகம் , சேதியூா், சாக்காங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை பதிவு செய்யும... மேலும் பார்க்க