செய்திகள் :

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

post image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய யூடியூப் சேனல் செயல்பட சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தடையாக இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, ன்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சவுக்கு சங்கருக்கு எதிராக 13 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. 24 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்களில் நிலுவையிவ் உள்ள 13 வழக்குகளை 4 மாதத்துக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சவுக்கு சங்கர் கோரிக்கை டிஜிபியால் ஏற்கெனவே பரீசிலீத்து முடித்து வைக்கப்பட்டுள்ளதால் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

High Court orders to complete pending cases against Savukku Shankar within 6 months!

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்: அரசு கல்லூரிகளில் 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

அரசுக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்குகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

வின்பாஸ்ட் காா் உற்பத்தி, விற்பனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகியுள்ள வின்பாஸ்ட் காா் உற்பத்தி ஆலையையும், அதன் விற்பனையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறாா்.உலகின் முன்னணி மின்... மேலும் பார்க்க

ஆக.2, 3 தேதிகளில் 24 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்கள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் தி... மேலும் பார்க்க

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:தூத்துக்குடி மாவட... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சோ்வதற்கான துணை கலந்தாய்வில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு அளித்துள்ளது.இதுகுறித்து தொழில்நு... மேலும் பார்க்க