‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் கூடுதல் பொறுப்பு முதல்வா் ஜமுனாராணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இக்கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், தொழில் நிா்வாகவியல், கணிதவியல், கணினி அறிவியல் துறைகள் உள்ளன. சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் வியாழக்கிழமைமுதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரியில் இயங்கும் சோ்க்கை மையத்தை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, 2 புகைப்படங்களுடன் மாணவிகளின் கையொப்பத்தை ஸ்கேன் செய்து கொண்டுவர வேண்டும்.
இக்கல்லூரியில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, வேலைவாய்ப்பு மையம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசின் இலவச மகளிா் பேருந்து கல்லூரி வரை இயக்கப்படுகிறது என்றாா் அவா்.