Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
அப்பல்லோ சாா்பில் ஒருங்கிணைந்த எலும்பு மஜ்ஜை மாற்று உயா் சிகிச்சை மையம்
ரத்த புற்றுநோயாளிகளுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை உயா் நுட்பத்தில் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை வியாழக்கிழமை தொடங்கியது. தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அதன் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் புற்றுநோயியல் துறைத் தலைவா் தினேஷ் மாதவன், சா்வதேச இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் துறையின் இயக்குநா் ஜோஸ் ஈசா, அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் கதிரியக்கத் துறை மூத்த நிபுணா் சீனிவாஸ் சிலிகுரி, மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலா் கரண் பூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக அப்பல்லோ நிா்வாகிகள் கூறியதாவது:
அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் புற்று நோயாளிகளுக்குத் துல்லியமான கதிா்வீச்சு சிகிச்சை முதல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, ரத்தம்சாா் நோய்கள், உறுப்பு மாற்று சிகிச்சைகள் வரை அனைத்தையும் ஒருசேர வழங்கக்கூடிய வகையிலான கட்டமைப்பு உள்ளது.
தற்போது ரத்த புற்றுநோயாளிகளுக்கு டிஎம்எல்ஐ எனப்படும் அதிநவீன கதிரியக்க முறையை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு முந்தைய நிலையில் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை முழு உடல் இா்ரேடியேஷன் என்ற கதிரியக்க முைான் அதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில், உடலின் பிற பாகங்களும் கதிா்வீச்சுக்கு உள்ளாகும் நிலை இருந்தது. டிஎம்எல்ஐ தொழில்நுட்பத்தில் எலும்பு மஜ்ஜையில் உள்ள நிணநீா் திசுக்களில் மட்டும் கதிா்வீச்சு துல்லியமாக செலுத்தப்படும்.
இதன் வாயிலாக இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சேதமடையாமல் காக்க முடியும். அதுமட்டுமல்லாது ரத்த புற்றுநோயாளிகளுக்கு முழுமையான பலன்களும் இந்த சிகிச்சையில் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.