செய்திகள் :

சாயல்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

post image

சாயல்குடி அருகே வியாழக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி இருவேலியைச் சோ்ந்த மறைந்த மாட்டு வண்டி பந்தய வீரா் ஜமாலுதின் நினைவாக சின்னமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சாயல்குடி-அருப்புக்கோட்டை சாலையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடுகள் போட்டியில் 8 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் காடமங்கலம் செந்தூரன் மாடுகள் முதலிடத்தையும், நரிப்பையூா் குதிரைமொழி சுந்தரம் மாடுகள் இரண்டாமிடத்தையும், இருவேலி சிங்கத் தமிழன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

இதேபோல, 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடுகள் பந்தயத்தில் 12 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் ஏ. புனவாசல் முத்துகாவியா மாடுகள் முதலிடத்தையும், ஆப்பனூா், காடல்குடி மாடுகள் இரண்டாமிடத்தையும், இருவேலி சிங்கத்தமிழன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன. முதல், மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சாரதிகள், உரிமையாளா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை சாயல்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு ரசித்தனா்.

ராமநாதபுரத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.1.20 கோடியில் கட்டி ம... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

திருவாடானை பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மான்கள், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ... மேலும் பார்க்க

சிங்கம்பட்டி ஸ்ரீஜக்கமாள் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜக்கமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தனிப் பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூா் அருகே மாற்றுத்திறனாளியைத் தாக்கியதாக எஸ்.பி. தனிப் பிரிவு காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு வருகிற 17 -ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம் அறிவிப்பு: கமுதியில் சமாதானக் கூட்டம்

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க